பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி நகரில் ஏராளமானவர்கள் ஆங்காங்கே கடைகள் அமைத்துள்ளனர். இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கடை வீதி, சத்திரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடைகளில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சிவக்குமார், செந்தில்குமார், செல்வம், மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். மேலும் பொள்ளாச்சி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.


Next Story