பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது


பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது
x

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி:

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகர பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வணிக நிறுவனங்கள்

பாலித்தீன் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது தான் பிளாஸ்டிக். இது ஒரு வகையான பெட்ரோலிய வகையைச் சேர்ந்த பொருளாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நிலபரப்புகள் பாதிக்கப்பட்டு அதில் வாழும் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள், விளை நிலங்கள், பசுமை பரப்புகள், காடுகள் ஆகியவை அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது. இந்த ஆபத்தான பிளாஸ்டிக்கை அழிப்பதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது.தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை எண் 84-ல் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, வினியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிற்றுண்டிகள், திருமண மண்டபங்கள், பல்பொருள் அங்காடி மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக்கை தவிர்க்க...

மக்கும் தன்மையுடன்கூடிய மாற்று பொருளான துணிப்பை, சணல் பைகள், பாக்கு மட்டைகளாலான பொருட்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கண்ணாடி குவளைகள், மரக்கரண்டிகள், வாழை இலை மற்றும் தாமரை இலை போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.இந்த மாதம் 31-ந் தேதிக்குள் வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு மாற்றாக, மஞ்சப்பை, பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும். வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள், ஓட்டல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story