வெள்ளியங்கிரி மருதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்


வெள்ளியங்கிரி மருதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
x

பக்தர்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசுவதால் வெள்ளியங்கிரி மற்றும் மருதமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளளர்

கோயம்புத்தூர்

கோவை

பக்தர்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசுவதால் வெள்ளியங்கிரி மற்றும் மருதமலையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளளர்.

மருதமலை, வெள்ளியங்கிரி

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. எனவே பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

அதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது.

இது தென் கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைக்கு மேல் ஏறிச் செல்ல ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசனம் செய் கின்றனர். ஆனாலும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மலையேறும் பக்தர்களை வனத்துறையினர் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.

ஆனாலும் மலையேறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்கின்றனர். அவர்கள், தண்ணீரை குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை வனப்பகுதிக்குள் தூக்கி வீசி விட்டு செல்கிறார்கள். இதனால் வெள்ளியங்கிரி, மருதமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.

வனவிலங்குகளுக்கு ஆபத்து

குறிப்பாக மருதமலையில் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை அருகே ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடப்பதை காண முடிகிறது. இதில் வனப்பகுதியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது மிகவும் சவாலான பணி ஆகும்.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளின் உயி ருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு வனச் சூழலும் பாதிக்கப்படும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் வனத்துறை, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து பக்தர்களின் வசதிக்காக மலையில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண் டும். மேலும் தீவிர கண்காணிப்பு செய்து பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை மலைக்கு மேல் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story