பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி


பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி
x

பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகராட்சியில் "தூய்மையே சேவை" என்னும் தலைப்பில் செப்டம்பர் 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தூய்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் பட்டுக்கோட்டை நகராட்சியுடன் பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து "நீர் நிலைகளில் குப்பைகள் கொட்ட வேண்டாம்" என தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதை தொடர்ந்து பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை படகு மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார். பொறியாளர் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல், உதவி திட்ட கணினி அமைப்பாளர் எட்வின், துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் அறிவழகன், மகாமுனி, துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் நகராட்சி பணியாளர்கள், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story