110 பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு தட்டு, டம்ளர்- மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வழங்கினார்

110 பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு தட்டு, டம்ளர்- மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வழங்கினார்
x

110 பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு தட்டு, டம்ளர்களை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவண்ணாமலை

செங்கம்

110 பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு தட்டு, டம்ளர்களை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வழங்கினார்

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜீலு, அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் வரவேற்றார்.

இதில் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 110 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தட்டு மற்றும் டம்ளர் உள்ளிட்ட பொருட்களை மு.பெ.கிரி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவானந்தம், பரிமளா உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story