நாமக்கல்லில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல்லில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்.
இதில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அனைத்து செயல்களிலும் நேர்மையாக சட்டவிதிகளை பின்பற்றி, லஞ்சம் வாங்காமலும் கொடுக்காமலும் வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என உறுதி ஏற்றனர். மேலும் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்உதாரணமாக திகழ்வதோடு, ஊழல் தொடர்பான நிகழ்வை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என கலெக்டர் ஸ்ரேயா சிங் உறுதிமொழியினை வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தேவிகா ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.