தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்  முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட கருவூல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுமதி, கலெக்டர் அலுவலக மேலாளர் கேசவமூர்த்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story