கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி


கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி
x

கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

குமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பரியா, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உள்பட அரசு அதிகாாிகள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புகையிலைக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

1 More update

Next Story