பிளாட்டோஸ் பள்ளி மாணவிகள் சாதனை
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். இதில் திருப்பூர் மாவட்டம் சின்னாண்டிபாளையம் பிளாட்டோஸ் அகடாமி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட கிருத்திகா மற்றும் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட பிரேமா ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர். மாநில அளவில் பதக்கங்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் சுரேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோரையும், பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன் அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.