பெரம்பலூரில் உழவு பணிகள் மும்முரம்


பெரம்பலூரில் உழவு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 15 Jun 2022 6:10 PM GMT (Updated: 15 Jun 2022 6:11 PM GMT)

பலத்த மழை காரணமாக பெரம்பலூரில் உழவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்தது. பெரம்பலூர் நகரில் அதிகபட்சமாக ஒரேநாளில் 11.2 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. எறையூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 1 மி.மீ. மட்டுமே மழை பதிவானது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிவரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம்- 37, பாடாலூர்-40, அகரம்சிகூர்-36, லெப்பைக்குடிகாடு-21, புதுவேட்டக்குடி-2, பெரம்பலூர்- 112, தழுதாழை-14, வி.களத்தூர்-21, வேப்பந்தட்டை-22. பெரம்பலூர் மாவட்டத்தின் மொத்த மழையளவு -307 மி.மீ. சராசரி மழையளவு-27.91 மி.மீ. ஆகும். ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில் பெரம்பலூர் சுற்றுவட்டாரத்தில் பெய்துள்ள மழை காரணமாக வயல்களில் உழவு, விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.


Next Story