வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
x

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த தலமாகவும் விளங்குகிறது. இதேபோல பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் புதுச்சேரி கடம்பாக்கம் நீமல்லீஸ்வரர் உழவாரப்பணி திருக்கூட்டத்தை சேர்ந்த 135 சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். இதில் ரெங்கநாதன் சிவனடியார் தலைமையில் வேலுச்சாமி மற்றும் மேல்காத்தமங்கலம், கீரமங்கலம், காட்டேரிக்குப்பம், பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் ஈடுபட்டனர்.



Next Story