அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணி நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவிலில் உழவார பணி நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள கொடிமரம், பலிபீடம், சரவிளக்குகள் போன்றவை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
மேலும் கோவிலில் உள்ள பல்வேறு சாமி சன்னதிகளின் கதவுகள், சுவர் போன்றவற்றில் குழாய் மூலம் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story