போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.க.வினர் மனு
நெல்லையில் போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி
பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் வீடு மற்றும் காரை சேதப்படுத்தியதாகவும், இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் நேற்று பா.ஜனதாவினர் போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நெல்லை மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமையில், பட்டியல் அணி பார்வையாளர் முத்துபலவேசம், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story