பிளஸ்-1 பொ துத்தேர்வை 10 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுதினர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 317 மாணவ , மாண விகள் எழுதினர். 1,130 பேர் தே ர்வு எழுதவரவில்லை .
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 317 மாணவ , மாண விகள் எழுதினர். 1,130 பேர் தே ர்வு எழுதவரவில்லை .
பிளஸ்-1 பொ துத்தேர்வு
தமிழ்நா டு முழுவதும் நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடை பெறுகிறது. இதனை தொடர்ந்து பிளஸ்- 1 பொதுத் தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மயிலாடுதுறை மாவ ட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 4 ஆயிரத்து 721 மாணவர்களும், 5 ஆயிரத்து 596 மாண விகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 317 பேர் எழுதினர். 720 மாண வர்களும், 410 மாணவிகளும் என மொத்தம் 1,130 பேர் தேர்வு எழுத வரவில்லை .
பறக்கும் படை
மாவ ட்டத்தில் 36 பொதுத் தேர்வு மையங்களும், 2 தனித் தேர்வர்களுக்கான மையங்களும் என மொத்தம் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ , மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணித்திட 824 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தே ர்வு மையங்களில் குடிநீர், மின்சா ரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.