புகைபிடித்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி-ஆனைமலையில் பரபரப்பு
புகை பிடித்ததை பெற்றேர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை
புகை பிடித்ததை பெற்றேர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ்-1 மாணவன்
கோவை மாவட்டம் ஆனைமலை உப்பிலியர் வீதியைச் சேர்ந்த 15 வயது மாணவன் அந்தப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இந்த நிலையில் அந்த மாணவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவனிடம், அவனது பெற்றோர் கேட்டுள்ளனர். மேலும் புகை பிடிக்க கூடாது என்று கண்டித்ததுடன், படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
புகை பிடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளேடால் தனது கழுத்தை தற்கொலைக்கு முயன்றார். இதனால் மாணவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகை பிடித்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.