தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதி விபரீதம்: பிளஸ்-1 மாணவி தற்கொலை
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதி பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் மாங்குடி. பெட்டிக்கடைக்காரர். இவருடைய மகள் அரியஜோதி (வயது 16). இவர் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் அரியஜோதி தேர்ச்சி பெற்றார். ஆனாலும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதி மனவருத்தம் அடைந்தார். இந்தநிலையில் விபரீத முடிவு எடுத்து, மின்விசிறியில் தூக்குப்போட்டு மாணவி அரியஜோதி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story