திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பலி
x

வாணியம்பாடி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.

திருப்பத்தூர்

பிளஸ்-1 மாணவன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஷா. இவரது மகன் அஜ்ஹர் அகமத் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இந்த நிலையில் வாணியம்பாடியை அடுத்த நாதிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் சென்றிருந்தான்.

அப்போது திருமண மண்டபத்தில் போடப்பட்டிருந்த பந்தல் மீது மின் கம்பி உரசியதாக கூறப்படுகிறது. அப்போது பந்தலின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த அஜ்ஹர் அஹமத் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசபட்டான்.

மின்சாரம் தாக்கி பலி

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மாணவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் மாணவனை பரிசோதித்து பார்த்து ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story