பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

கீழ்பென்னாத்தூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கீக்களூர் புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மகள் சுபுலட்சுமி (வயது 15), அவலூர்பேட்டை பெண்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் ேபரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story