பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மயிலாடுதுறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-1 மாணவி
மயிலாடுதுறை அருகே ஆனதண்டவபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகள் புவனா(வயது 16). இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு புவனா தனது வீட்டின் எதிரில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கி உள்ளார். அப்போது படியில் வழுக்கி விழுந்த புவனாவிற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக புவனா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டிலேயே இருந்தாலும் ஏன் படிக்காமல் இருக்கிறாய், நீ பள்ளிக்கு செல் என்று புவனாவை அவரது பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த புவனா நேற்று முன்தினம் வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.