பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து


பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து
x

மதுரையில் பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மதுரை

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவர் ஊமச்சிகுளம் கண்மாய் அருகே நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர், அந்த மாணவரிடம் பீடி, குட்கா, பாக்கெட் வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு அந்த மாணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும், மாணவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். அந்த மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story