பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம்


பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம்
x
தினத்தந்தி 31 July 2023 8:25 AM IST (Updated: 31 July 2023 10:01 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ் 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (ஜூலை 31) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநா் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொது தோ்வை எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஜூலை 31-ம் தேதி) முதல் வழங்கப்படவுள்ளன. மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளில் மாற்றம் இருந்த மாணவா்களுக்கு திருத்தப்பட்ட அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story