பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி


பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 18 Aug 2022 8:00 PM GMT (Updated: 18 Aug 2022 8:00 PM GMT)

சேலத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்

சேலம் மன்னார்பாளையம் அருகே அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த மாத தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை முயற்சிக்கு வேறு காரணம் ஏதும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story