நம்பியூர் அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை


நம்பியூர் அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

நம்பியூர் அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு

நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமக்கண்ணன். பனியன் கம்பெனி தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகள் கிருத்திகா (வயது 17). இவர் நம்பியூரை அடுத்த கெடாரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார். தந்தை ராமக்கண்ணன் மீது கிருத்திகாவுக்கு அதிக பாசம் இருந்து வந்துள்ளது. இதனிடையே ராமக்கண்ணன் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருத்திகா மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் கிருத்திகா தூக்குப்போட்டுக்கொண்டார். இதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கிருத்திகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நம்பியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story