தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தோல்வி பயத்தால் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

தோல்வி பயத்தால் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள நாராயண குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஹரி (வயது 17), தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். மாணவர் ஹரி 11-ம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை, அதற்கும் தேர்வு எழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வு முடிவு வெளியானவுடன் அதுகுறித்து கேட்டு அறிவதற்காக பெற்றோர் ஹரியை தேடிய போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

தேர்ச்சி பெறவில்லை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஹரி 2 பாடங்களில் தேர்ச்சியும், 4 பாடங்களில் தேர்ச்சியும் பெறவில்லை. மேலும் அவர் 217 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story