வீரகனூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை


வீரகனூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

வீரகனூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

தலைவாசல்:

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் பெருமாள்ராஜ். இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்திரா, தனது இளைய மகள் கோபிகா (வயது 17)வுடன் வீரகனூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கோபிகா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு, மாணவி கோபிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story