ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி


ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார்.

கோயம்புத்தூர்

ஆழியாறு

ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார்.

ஆழியாறு தடுப்பணை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 170 மாணவர்கள் நேற்று முன்தினம் இரவில் ஆழியாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று காலை 8 மணியளவில் தடுப்பணையில் இறங்கி குளித்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

அதில், பிளஸ்-2 மாணவரான நடராஜன் என்பவரது மகன் லோகசுதன்(வயது 17), புதை மணலுடன் கூடிய ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதை கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் குதித்து லோகசுதனை மீட்டனர். தொடர்ந்து கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், லோகசுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில், தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தது, சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story