பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கியசக மாணவர் மீது போக்சோவில் வழக்கு
கோவையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை
கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவிக்கும், பிளஸ்-2 படித்து வந்த சக மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுநாளடைவில் காதலாக மாறியது. அப்போது மாணவர் ஆசைவார்த்தை கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் பெற்றோர் மாணவியை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, பிளஸ்-2 மாணவருடன் ஏற்பட்ட பழக்கும் குறித்து கூறினார். இந்த சம்பவம் குறித்து, மாணவியின் பெற்றோர் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் பிளஸ்-2 மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.