சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலி


சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
x

சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலியானார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலியானார்.

ஆற்காடு பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகன் செல்வரசு (வயது 19). இவரும் இவரது உறவினர் மகனான சரண்ராஜ் (17) என்ற பிளஸ்-2மாணவரும் ஆயிலம் கிராமத்திலிருந்து ஆற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டிருந்தனர்.

அப்போது கத்தியவாடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வந்த பதிவு எண் இல்லாத மோட்டார்சைக்கிளும் இவர்களது மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சரண்ராஜ் சிகிச்சை பல நன்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story