பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்
கள்ளக்குறிச்சி அருகே செல்போன் மூலம் மிஸ்டு கொடுத்து பழக்கமான பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் அன்பரசன்(வயது 27). இவர், கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவியின் செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். உடனே அந்த எண்ணை மாணவி தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் அன்பரசன் இனிமையான குரலில் பேசினார். பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியின் வீட்டிற்கு வந்த அன்பரசன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்தார்.
வாலிபர் கைது
அதன்பிறகும் அவர் அடிக்கடி தனிமையில் சந்தித்து, மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார். நேற்று முன்தினம் மாணவியின் வீட்டின் பின்புறம் நின்று கொண்டு அன்பரசன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை கண்டதும் அன்பரசன், தப்பி ஓடிவிட்டார்.
விசாரித்தபோது, அன்பரசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், இதை மறைத்து மாணவியுடன் பேசி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர்.