பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்
உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்
கள்ளக்குறிச்சி
எலவனாசூர்கோட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் அைமந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்ற மாணவி மாலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணததால் இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story