பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x

மத்தூர் அருகே தேர்வு பயத்தினால் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. கட்டிட மேஸ்திரி. இவரது மகன் லட்சுமணன் (வயது 17). இவன் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். தற்போது மாணவன் பிளஸ்-2 தேர்வு எழுதி வந்தான். கடந்த நாட்களாக தேர்வு பயத்தினால் மாணவன் பதற்றத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story