பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்
பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்ததையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்ததையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவி கல்லூரியில் பயில பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது அந்த மாணவி விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தபடி சாதி சான்றிதழ் இல்லாததால் அவரால் எந்த கல்லூரியிலும் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் தன்னுடன் படித்த சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று மாலை மாணவியின் உறவினர்கள் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.