பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டுபடி இன்று நடைபெறும் - அரசு தேர்வுகள் இயக்ககம்


பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டுபடி இன்று நடைபெறும் - அரசு தேர்வுகள் இயக்ககம்
x

பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டபோதும் இன்று நடைபெற உள்ள பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


Next Story