பி.எம். கிசான் திட்டத்தில் உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம்


பி.எம். கிசான் திட்டத்தில் உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:10 AM IST (Updated: 28 Jun 2023 2:46 PM IST)
t-max-icont-min-icon

பி.எம். கிசான் திட்டத்தில் உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 66 ஆயிரத்து 164 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு 13 தவணைகள் வரை தொகை விடுவிக்கப்பட்டு, விரைவில் 14-வது தவணை விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத 3,632 விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 6,315 விவசாயிகள் இ-கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். எனவே விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம் அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களில் பி.எம். கிசான் செயலி மூலமாக கைரேகை மற்றும் முக அடையாளம் கொண்டும் இ-கே.ஒய்.சி. செய்யலாம். மேலும், அருகிலுள்ள அஞ்சல் நிலைய அதிகாரியை அணுகியும் இ-கே. ஒய்.சி செய்து கொள்ளலாம்.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர் கொண்டு உதவி பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story