பா.ம.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு பணி நியமன உத்தரவு


பா.ம.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு பணி நியமன உத்தரவு
x

தச்சூர் கிராமத்தில் பா.ம.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. மேற்கு ஆரணி பகுதி-1, பகுதி-2 ஒன்றிய நிர்வாகிகள், தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடந்தது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அஜித்குமார், பெருமாள், மாவட்ட துணை செயலாளரும், தச்சூர் ஊராட்சி மன்ற தலைவருமான வடிவேலு, அமைப்புச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சிவா மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story