வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. மனு


வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. மனு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு தபால் மூலம் முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பி வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் மூலம் மனு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் டாக்டர் ராஜா தலைமையில் எலவனாசூர்கோட்டை தபால் நிலையத்தில் இருந்து 22 ஆயிரம் தபால் முதல்-அமைச்சருக்கு நேற்று அனுப்பப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் புகைப்பட்டி செந்தில், ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் பாண்டியன், மாவட்ட பசுமைத்தாயகம் தலைவர் நேரு, விவசாய அணி தலைவர் ராஜா, ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் வாசுதேவன், பா.ம.க. நிர்வாகிகள் சூர்யா, திருமுருகன், பாஸ்கர், ஏழுமலை, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story