பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்


பா.ம.க.  நிர்வாகிகள் கூட்டம்
x

மயிலாடுதுறையில், பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், பா.ம.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். அதேபோல போதை பொருட்கள் விற்பனையையும் முழுமையாக தடை செய்யவேண்டும். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் தங்க.அய்யாசாமி, காசி.பாஸ்கரன், குத்தாலம் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கமல்ராஜா நன்றி கூறினார்.






Related Tags :
Next Story