பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம்


பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
x

குடியாத்தத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

குடியாத்தம் நடுப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கு.வெங்கடேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் ரமேஷ் நாயுடு, மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ஜி.சுரேஷ் குமார், நகர செயலாளர் எஸ்.ரமேஷ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குடியாத்தம் நகரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ள தெருவில் ஆக்கிரமப்புகளை அகற்றி சீர்செய்ய நகராட்சியை கேட்டுக் கொள்வது. குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள 35 கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு கூட்டுறவு மில் இல்லாமல் தனியார் மில் மூலம் நூல் கொள்முதல் செய்ய வேண்டும் என கைத்தறி உதவி இயக்குனரை கேட்டுக் கொள்வது.

ஓய்வு பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,000-ஐ ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது. குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நேதாஜி சவுக் மற்றும் காமராஜர் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story