தைலாபுரத்தில்பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது


தைலாபுரத்தில்பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்


திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், வருகிற நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்தும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story