பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தைலாபுரத்தில் நாளை நடக்கிறது


பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தைலாபுரத்தில் நாளை நடக்கிறது
x

டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தைலாபுரத்தில் நாளை நடக்கிறது.

சென்னை,

பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 25-ந்தேதி (நாளை) காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற இருக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள். பா.ம.க.வின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story