பா.ம.க. செயற்குழு கூட்டம்
சங்கரன்கோவிலில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வசந்தகுமார், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சுவாமிதாஸ், சங்கரன்கோவில் நகர செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் பால் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாக்கியம், நிர்வாகிகள் மதிராஜ், மாரிக்கனி, சந்திரசேகர், சதீஷ்குமார், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மேலநீலிதநல்லூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தேவானந்தம் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீரிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.