பா.ம.க. கொடியேற்று விழா


பா.ம.க. கொடியேற்று விழா
x
தினத்தந்தி 30 Jan 2023 12:30 AM IST (Updated: 30 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது.

திண்டுக்கல்

பாட்டாளி மக்கள் கட்சியின், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைந்த ஒன்றியம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் திலகபாமா பங்கேற்று கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளான பொன்னகரம், தாமரைப்பாடி, அனுமந்தநகர், கொத்தம்பட்டி, வேடப்பட்டி, சிறுமலைபிரிவு, நல்லாம்பட்டி, ம.மூ.கோவிலூர் பிரிவு, தோமையார்புரம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீரங்கன், ராபர்ட் கெமில்டன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பாஸ்கரன், இளைஞர் சங்க செயலாளர் அதிவீரபாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சண்முகவேல், காளிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், பார்வதிராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story