கடலூரில், பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி40 பேர் கைது
கடலூரில், பாமக வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தி, சுரங்க விரிவாக்க பணியை தொடங்கி உள்ளது. இதை கண்டித்து பா.ம.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை எதிரே ஒன்று திரண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பா.ம.க.வினர் 40 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story