பா.ம.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து


பா.ம.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து
x

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தா.பேட்டையில் பா.ம.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

திருச்சி

தா.பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற ேவண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள வாரி புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும். சூரம்பட்டி முதல் கொளக்குடி வரை புதிதாக கட்டப்படும் பாலங்கள் தரம் இல்லாததால் அவற்றை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரரை மாற்றக்கோரி பா.ம.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, முசிறி தாசில்தார் அலுவலகத்தில் பாத்திமா சகாயராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பான முன்மொழிவு மாவட்ட மேலாளருக்கு தகவல் அனுப்பி டாஸ்மாக் கடையை 30 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எம்.கருப்பம்பட்டியில் வாரி புறம்போக்கை ஆக்கிரமித்து வைத்துள்ள தனி நபரிடம் இருந்து 90 நாட்களுக்குள் தா.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சூரம்பட்டி முதல் கொளக்குடி வரை புதிதாக கட்டப்படும் பால கட்டுமான பணி குறித்து அனைத்து விவரங்களுடன் அறிவிப்பு பலகை சம்பந்தப்பட்ட இடத்தில் 2 நாட்களுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என முசிறி கிராம சாலை உதவி கோட்ட பொறியாளரால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பா.ம.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் பா.ம.க. மாநில துணை தலைவர் மனோகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story