டாஸ்மாக் கடைகளை ஒருநாள் மூட பா.ம.க. மனு


டாஸ்மாக் கடைகளை ஒருநாள் மூட பா.ம.க. மனு
x

டாஸ்மாக் கடைகளை ஒருநாள் மூட பா.ம.க. சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ராஜேந்திரன் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், மதுவிற்கு எதிராக தொடர்ந்து 40 ஆண்டு காலமாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். எனவே அவரது பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மதுவிற்கு எதிராக அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், தமிழக மக்களும் பா.ம.க.வினரோடு இணைந்து குரல் எழுப்ப வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story