பொதுமக்களை பொதுமக்களை அலைக்ககழிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
பொதுமக்களை பொதுமக்களை அலைக்ககழிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அணைக்கட்டு
பொதுமக்களை பொதுமக்களை அலைக்ககழிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், மண்டல அமைப்பு தலைவர்கள் மற்றும் அமைப்பு செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பொய்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் அக்னி வேல்முருகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் நா. சசிகுமார், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் நவமணி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மேற்கு பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட அமைப்பு தலைவர் அ.பா.சாரதி வர்மன் வரவேற்று பேசினார்.சிறப்புஅழைப்பாளர்களாக மாநில அமைப்பு தலைவர் பழ. தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் தர்மபுரி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அணைக்கட்டு தாலுகாவில் யு.டி.ஆர்.திருத்தம் என்ற பெயரில் பொது மக்களின் பட்டாவில் மாறி, மாறி பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இத குறித்து குறைதீர்வு கூட்டங்களிலும், மனுவாகவும் கொடுக்கப்படும் கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மனுக்களை தள்ளுபடி செய்து விடுகின்றனர். யு.டிஆரில் உள்ள திருத்தங்களை சரிசெய்யாத பொதுமக்களை அலைக்ககழிக்கும் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மேலும் மூஞ்சூர் பட்டு ஊராட்சி ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் மலை அடிவாரத்தில் தனியார் பட்டா நிலத்தில் சூலைக்கு மண் எடுப்பதால் மண்ணரிப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பட்டா நிலத்தில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. மேலும் மாவட்ட, நகர, பேரூர், மற்றும் ஊராட்சிகளில் உள்ள அமைப்பாளர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் கிளைகள் அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்ற வேண்டும். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை முதல் இடத்திற்கு கொண்டு வரவும் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் ஆக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் கே.எல்.இளவழகன், மாநிலத் துணைத் தலைவர் எம்.டி.சண்முகம், மாவட்ட தலைவர்கள் பி.கே. வெங்கடேசன், மற்றும் கு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.