பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது போக்சோவில் வழக்கு


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது போக்சோவில் வழக்கு
x

அணைக்கட்டு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது போக்சோவில் வழக்கு பதிரு செய்யப்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு தாலுகா ஆதியூரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26), டிரைவர். இவரும் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார் அவரை ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் மருந்து, மாத்திரைகள் கொடுத்துள்ளார். அவற்றை சாப்பிட்ட பின்பும் அவருக்கு உடல்நலம் குணமடையவில்லை.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி மாணவியிடம் கேட்டபோது நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இதையடுத்து டாக்டர்கள் மாணவியின் தாயார் மற்றும் போலீசாருக்கு தகவல் கூறினர்.

இதுதொடர்பாக மாணவியின் தாயார் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தில் உதயகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story