நெகமத்தில் 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் -தொழிலாளி மீது போக்சோவில் வழக்கு


நெகமத்தில் 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் -தொழிலாளி மீது போக்சோவில் வழக்கு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

நெகமத்தில் 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

12-ம் வகுப்பு மாணவி

கோவை மாவட்டம் நெகமம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 28-ந்தேதி முதல் திடீரென்று காணவில்லை. இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் காணவில்லை என்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் யார் பேசி உள்ளனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்த 26 வயதான கூலி தொழிலாளி கடத்தி சென்றது தெரியவந்தது.

போக்சோ வழக்கு

இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த சிறுமியையும், தொழிலாளியையும் மீட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சிறுமியின் ஊருக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இதையடுத்து சிறுமியை மடத்துக்குளத்திற்கு கடத்திச் சென்று கடந்த 4-ந்தேதி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை திருமணம் செய்ததாக தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story