பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் கலெக்டர் தகவல்


பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 3:52 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந் தேதி சிவகங்கையில் நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந் தேதி சிவகங்கையில் நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

போட்டி

இது ெதாடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி்ல் கூறி இருப்பதாவது:-

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப் பெற்று பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இந்த போட்டிகள் வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள்.

விதிமுறைகள்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு தனியார், நிதியுதவி, பதின்ம, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரையுடன் சிவகங்கை மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story