கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான் மீட்பு


கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான் மீட்பு
x

கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான் மீட்கப்பட்டது

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகபுரம் கிராமத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் புள்ளிமான் ஒன்று வந்தது. அந்த புள்ளிமானை தெரு நாய்கள் விரட்டியதில் அது அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது. கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளிமானை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்..


Next Story